கடந்த குளிர்காலத்தில் பனிப்பொழிவு குறைவாக இருந்ததால் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் பனிப்பொழிவு 150 மீட்டர் குறைந்துள்ளதாக செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகா துருவப் பகுதிகளில் பனிப்பாறைகள் உருகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடல் மட்டத்திலிருந்து 8,849 மீட்டர் உயரத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்திலும் இதே நிலை காணப்படுகிறது.
எவரெஸ்ட் சிகரம் நேபாளத்திற்கும் திபெத்துக்கும் இடையில் அமைந்துள்ளது. இங்கு, அக்டோபர் 2023 முதல் கடந்த ஜனவரி வரை நாசா எடுத்த செயற்கைக்கோள் படங்களின் பகுப்பாய்வு, கடந்த 2 ஆண்டுகளாக ஜனவரியில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதையும், கடந்த குளிர்காலத்தில் பனிப்பொழிவு குறைவாக இருந்ததால் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் பனிப்பொழிவு 150 மீட்டர் குறைந்துள்ளது என்பதையும் காட்டுகிறது என்று அமெரிக்காவின் நிக்கோலஸ் கல்லூரியின் சுற்றுச்சூழல் அறிவியல் பேராசிரியரும், பனிப்பாறை நிபுணருமான மவுரி பெல்டோ கூறினார்.
2021-ம் ஆண்டு வறண்ட குளிர்காலத்தில் இருந்து பனி மூட்டம் குறைவாகவே உள்ளது என்று அவர் கூறுகிறார். இந்த குளிர்காலத்தின் ஆரம்பத்தில் சில பனிப்பொழிவு இருந்தாலும், பனி மூட்டம் நீடிக்கவில்லை. எவரெஸ்ட் சிகரத்தில் உள்ள பனிப்பாறைகள் தொடர்ந்து உருகி 6,000 மீட்டருக்கு மேல் குறைந்துள்ளதாகவும், இங்குள்ள பனி நேரடியாக நாளொன்றுக்கு 2.5 மில்லி மீட்டர் வீதம் ஆவியாகி வருவதாகவும் மவுரி பெல்டோ தெரிவித்தார்.