காங்கோவில் கிளர்ச்சியாளர்களின் வன்முறை தாக்குதல் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு காங்கோவில் M23 கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசுப் படைகளுக்கிடையே நடந்த சண்டையில் 52 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 8 பெண்களும், 2 குழந்தைகளும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

M23 கிளர்ச்சியாளர்கள் டுட்சி இனத்தைச் சேர்ந்தவர்கள். கிழக்கு காங்கோவின் நிலப்பகுதிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்தப் பகுதியில் கனிம வளங்கள் அதிகமாக இருப்பது காரணமாக, பல ஆயுதக் குழுக்களுக்கிடையே மோதல்கள் அதிகரித்து வருகின்றன.
காங்கோ அரசாங்கம், M23 கிளர்ச்சியாளர்களுக்கு ருவாண்டா அரசாங்கம் மறைமுகமாக ஆதரவளித்து வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ளது. இதனால் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பதற்றமடைந்துள்ளன.
தொடர்ச்சியான மோதல்களால் பொதுமக்கள் பெரும் துயரம் அனுபவிக்கின்றனர். பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அகதிகளாக வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் அதிகரித்திருப்பதும் கவலைக்குரியதாகும்.
M23 கிளர்ச்சியாளர்கள் கோமா போன்ற முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ளதால், அங்கு வாழ்ந்த மக்கள் பாதுகாப்புக்காக தப்பிச் செல்கின்றனர். உலக சமூகம் இந்த வன்முறையை கண்டித்து, பொதுமக்கள் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.