பிரேசில்: அமேசான் மழைக்காடுகளில் ஆக்கிரமிப்புகளை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
தென்அமெரிக்க நாடான பிரேசிலுக்கு உட்பட்ட அமேசான் மழைக் காடுகளில் ஆக்கிரமிப்புகளை அடையாளம் காண முந்துருகு பழங்குடியின மக்கள், தங்கள் பகுதியை வரையறுக்கும் அறிவிப்பு பலகைகளை அமைத்தனர்.
இதற்கான நடவடிக்கையை பிரேசில் அரசு எடுக்கத் தவறியதால், பழங்குடியினத்தினர், 8 நாட்கள் காட்டில் பயணித்து குறிப்பிட்ட இடங்களில் பாதுகாக்கப்பட்ட இடம் என்ற வாசகம் இடம்பெற்ற போர்டை நட்டனர்.
எல்லையை அடையாளப்படுத்த குடும்பத்தினருடன் சென்ற பழங்குடியின மக்கள், இரவில் தங்கி சமையல் செய்து சாப்பிட்ட பிறகு பயணத்தை தொடர்ந்தனர். களைப்பை போக்குவதற்கு அனைவரும் கை கோர்த்து பாடல் பாடி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.