சீனாவின் குவாங்சி மாகாணத்தை சேர்ந்த 26 வயதான ஹூவாங் என்பவர், பணம் இல்லாத நிலை காரணமாக ஆடம்பர வாழ்க்கையை விரும்பி, தனது பிறந்த இரு ஆண் குழந்தைகளையும் விற்ற சம்பவம் அந்த நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2020ஆம் ஆண்டில் முதல் குழந்தையை பெற்ற ஹூவாங், குழந்தையை 45,000 யுவானுக்கு விற்றார். அந்த பணத்தை ஆடம்பர வாழ்க்கைக்காக செலவழித்தார். பின்னர் பணம் முடிந்ததால், மீண்டும் குழந்தை பெற திட்டமிட்டு மற்றொரு ஆணுடன் இரண்டாவது குழந்தையை பெற்றார். இதையும் 38,000 யுவானுக்கு இடைத்தரகர் மூலம் விற்றார். அந்த இடைத்தரகர் அதை 1.03 லட்சம் யுவானுக்கு வேறு ஒருவரிடம் விற்றார்.

இந்த மோசடி பற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையின்போது உண்மை வெளியாகி, ஹூவாங் கைது செய்யப்பட்டார். குழந்தைகள் மீட்கப்பட்டு பாதுகாப்பகத்தில் வைக்கப்பட்டனர்.
மாவட்ட நீதிமன்றம், ஹூவாங்குக்கு 5 ஆண்டு 2 மாத சிறை மற்றும் 30,000 யுவான் அபராதம் விதித்தது. மேலும், உதவியவர் மற்றும் வாங்கியவருக்கும் சிறை தண்டனை அளிக்கப்பட்டது. குழந்தைகளை பொருளாக கருதி விற்பனை செய்த இந்த செயல் சமூக நெறிகளையும், மனித நேயத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.