அமெரிக்கா: நாசா செய்த சாதனை… பாடகி மிஸி எலியட்டின் தி ரைன் பாடலை வெள்ளி கிரகத்தில் ஒலிபரப்பி நாசா சாதனை செய்துள்ளது.
அமெரிக்க பிரபல பாடகி மிஸி எலியட்டின் ஹிட் பாடலமான தி ரைன், அந்நாட்டு விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவால் வெள்ளி கிரகத்தில் ஒலிபரப்பப்பட்டது.
ஒளியின் வேகத்தில் பூமியில் இருந்து 158 மில்லியன் மைல்கள் தூரத்தில் உள்ள வெள்ளி கிரகத்திற்கு 122 அடி அகல ரேடியோ டிஷ் ஆன்டனா மூலம் பாடலை நாசா அனுப்பியது. கலிஃபோர்னியாவில் உள்ள Deep Space Network வழியாக புவி வட்டப் பாதையில் பயணித்த முதலாவது ஹிப்-ஹாப் பாடல் என்ற சாதனையை நாசா விஞ்ஞானிகள் செய்து காட்டினர்.
2008இல் வெளியான தனது பாடலை வெள்ளி கிரகத்தில் ஒலிபரப்பியதன் மூலம் வானம் எல்லையல்ல, அதைத் தாண்டியும் சாதிக்கலாம் என காட்டியுள்ளதாக பாடகி மிஸி எலியட் சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார்.