துருக்கி : துருக்கியில் நடந்த பேச்சுவார்த்தையில்
உக்ரைன் – ரஷ்யா மத்தியில் புதிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பொக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டுக்கு மேல் ஆகிறது. இரு தரப்பிலும் பல உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இலைகளையே போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் பின்னர் மீண்டும் தாக்குதல் சம்பவங்கள் நடந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் தீவிர டிரோன் தாக்குதலை நடத்திய உக்ரைன், ரஷ்யாவின் 40 போர் விமானங்களை அழித்தது.
இதனால் 3-ம் உலகப்போர் ஏற்படும் அபாயம் உள்ளதாக சர்வதேச அரசியல் மேடை கருதுகிறது. இந்நிலையில், துருக்கியில் வைத்து இருநாடுகளிடையே 2-ம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் போர்க் கைதிகளை விடுவிப்பதற்கு இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 2 மணிநேரம் இப்பேச்சுவார்த்தை நீடித்துள்ளது. இதில் இந்த புதிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.