நியூயார்க்: நாசாவுடன் இணைந்து நிலவில் செல்போன் டவர் அமைக்கும் பணிகளில் நோக்கியா நிறுவனம் ஈடுபட்டுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன. நாசாவுடன் இணைந்து நிலவில் செல்லுலார் டவர் அமைக்கும் பணிகளில் நோக்கியா ஈடுபட்டுள்ளது.
நிலவில் மனிதர்கள் நீண்ட காலம் தங்கி ஆய்வு செய்யும் நாசாவின் Artemis திட்டத்தின் ஒரு பகுதியாக, இப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. விண்வெளி வீரர்கள், ரோவர்கள் இடையே தொலைதொடர்பு வசதிக்காக டவர் அமைக்கப்பட உள்ளது.
விண்வெளியின் கடுமையான சூழல்களிலும் செயல்படும் விதமாக டவர் அமையும் என நோக்கியா தெரிவித்துள்ளது.
இவ்வாறு செல்போன் டவர் அமைக்கப்பட்டால் அது மிகப்பெரிய சாதனையாக இருக்கும் என்றும், தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட புரட்சியாக இது அமையும் என அனைத்து தரப்பினரும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.