சென்னை: தமிழ்நாடு அரசு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகமை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் வெளியிட்ட அறிவிப்பு:- ஜெர்மனியில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிய, 38 வயதுக்குட்பட்ட டிப்ளமோ மற்றும் பட்டதாரி ஆண், பெண் செவிலியர்கள், பி1, பி2 அளவில் ஜெர்மன் மொழிப் புலமை மற்றும் குறைந்தபட்சம் 6 மாத பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இவர்களுக்கு ஆரம்ப கட்டத்தில் சுமார் 2 லட்சம் மாத சம்பளம் வழங்கப்படும். எனவே, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி நகல், அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் வெள்ளைப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படம் அடங்கிய விண்ணப்பத்தை ovemclmohsa2021@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் 5-ம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு: www.omcmanpower.tn.gov.in மற்றும் 044-22505886/ 63791 79200 என்ற எண்ணில் மேலும் அறியலாம்.