இந்தோனேசியா: 67,800 ஆண்டுகள் பழமையான குகை ஓவியம் இந்தோனேஷியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் முனா தீவில் உள்ள சுண்ணாம்புக் குகை ஒன்றில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், உலகிலேயே மிகவும் பழமையான பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
குகைச் சுவரில் சிவப்பு நிறத்தில் பதிக்கப்பட்ட கை அச்சுகள் மற்றும் பறவை தலைகளுடன் கூடிய விசித்திரமான மனித உருவங்கள் இந்த ஓவியங்களில் இடம்பெற்றுள்ளன.
கைகளைச் சுவரில் வைத்து அதன் மேல் இயற்கை நிறமிகளை ஊற்றி இந்த உருவங்கள் உருவாக்கப்பட்டிருப்பதும், சில விரல் நுனிகள் கூர்மையாகத் தெரியும் வகையில் நுணுக்கமாக மாற்றியமைக்கப்பட்டிருப்பதும் விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.