இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் பாகிஸ்தானை உளவியல் ரீதியாக தாக்கி உள்ளதாக, பாகிஸ்தான் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஓமர் அயூப் கான் கடும் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்தியா இன்னும் ஓராண்டுக்குள் மீண்டும் தாக்கும் என்பதற்கான சாத்தியம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

பஹல்கமில் ஏப்ரல் 22 ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததை அடுத்து, மே 7ஆம் தேதி இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்கள் மற்றும் விமானப்படைத் தளங்கள் தாக்கப்பட்டன.
இந்த தாக்குதலால் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டதாகவும், இந்தியா மீண்டும் தாக்கும் என்ற பயத்தில் பாக். எம்பிக்கள் நடுங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. பாக். ராணுவமும் தடுமாறிய நிலையில் உள்ளது என்றும் விமர்சனங்கள் எழுகின்றன.
ஓமர் அயூப், இந்தியாவின் பாதுகாப்புத் துறை முதலீடுகள் தொடர்ந்து அதிகரிக்கின்றன என்றும், ஏவுகணை, ட்ரோன் போன்ற நவீன போர் உபகரணங்கள் இந்தியாவை அதிக சக்தி வாய்ந்த நாடாக மாற்றியுள்ளதாக தெரிவித்தார். பாகிஸ்தான் அப்படிப் பெரிய யுத்தத் தயாரிப்பில் எதிலும் இல்லை என்பதே வெறும் உண்மை என்று அவர் வலியுறுத்தினார்.
பாகிஸ்தான் அரசு பாதுகாப்பில் கவனம் செலுத்தாமல் சமாதான அரசியலில் இறங்கி இருப்பதாகவும், இது தேசிய பாதுகாப்புக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார். பாக். ராணுவத்திற்கு தேவையான பட்ஜெட்டையும் சரிவர ஒதுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை பாகிஸ்தானை உளவியல் ரீதியாக தளர்வடையச் செய்துள்ளது என்பது பாக். எதிர்க்கட்சி சார்பிலேயே வெளியாகிய உண்மையாகும்.