காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பாகிஸ்தானிய தலிபான் அமைப்பினரை குறிவைத்து, பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் காபூல் முழுவதும் பதற்றம் நிலவுகிறது.
2021ல் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து தலிபான் ஆட்சியைப் பிடித்தது. அதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையே உறவு குறுக்கிட்டு வந்தது. சமீபத்தில், பாகிஸ்தானிய தலிபான்களின் இயக்கம் அதிகரித்துள்ளதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. இதன் பின்னணியில், காபூல் நகரில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வானில் போர் விமானங்கள் பறந்த சத்தம் கேட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். தாக்குதலில் தலிபான் தலைவர்களில் ஒருவரான நூர் வாலி மெஹ்சூத் குறிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் உயிர் பிழைத்ததாகவும், அவரது மகன் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு அமெரிக்க ராணுவம் ஆதரவாக இருந்ததாக சர்வதேச வட்டாரங்கள் கூறுகின்றன. இதன் மூலம் பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் உறவு மேலும் பதற்றமாகி, தெற்காசியாவின் பாதுகாப்பு நிலைமை ஆபத்தாக மாறும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.