லாகூர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா மேற்கொண்ட “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையின் பின்னணியில், இந்திய விமானங்களுக்கு விதிக்கப்பட்ட வான்வெளித் தடையை பாகிஸ்தான் ஆகஸ்ட் 24 வரை நீட்டித்துள்ளது.
பாகிஸ்தான் விமான போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த தடையை ஜூலை 18ம் தேதி மாலை 3.50 மணி முதல் ஆக.24ம் தேதி மாலை 5.19 மணி வரை அமலிலிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை, பயணிகள் விமானங்களுக்கே மட்டும் அல்லாமல், சரக்கு, ராணுவ மற்றும் ஒப்பந்த அடிப்படையில் இயங்கும் அனைத்து வகை விமானங்களுக்கும் பொருந்தும்.

பாகிஸ்தான் ஆதரவு கொண்ட பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில் தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபடுவதாக இந்தியா குற்றம் சாட்டி வருகிறது. அதற்கெதிராக இந்திய ராணுவம் மேற்கொண்ட பதிலடி நடவடிக்கைகளால் இருநாட்டு உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தியா பயங்கரவாதத்திற்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை கடைபிடிப்பதாகவும், தடையின்றி பயணிக்க வேண்டிய விமான போக்குவரத்து மேலாண்மை சிக்கலாக இருப்பதாக விமானத் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.