இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் மோதலில் 58 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 25 ராணுவ முகாம்களும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் நூர் வாலி மெஹ்சுத்தை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலாக, ஆப்கன் ராணுவம் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தியது. நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மேல், இரு நாடுகளுக்கு இடையிலான எல்லையில் 20 இடங்களில் தாக்குதல்கள் நடைபெற்றன.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இதற்கான பதிலடி குறித்து “எல்லை மோதலுக்குப் பிறகு நாங்கள் வலுவான பதிலடி கொடுத்தோம்” என்று கூறியதாலும், சம்பவ விவரங்களை குறைவாக பகிர்ந்ததாலும் விமர்சனங்களை சந்தித்துள்ளார். அவர் மேலும், பாகிஸ்தானின் பாதுகாப்பில் எந்த சமரசமும் ஏற்படாது என்றும், ஒவ்வொரு தாக்குதலுக்கும் வலுவான பதிலடி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.