லாகூரில் இருந்து வெளியான தகவலின்படி, பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தான் தொடர்புடையது என இந்தியா வலியுறுத்தி வரும் நிலையில், பாகிஸ்தான் அதனை ஒப்புக்கொள்ளாமல் தினமும் புதிய கதைகள் கூறி வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அரசியல் தலைவர்கள் மாறுமாறாக பதில்கள் அளித்து, சர்வதேச சமூகத்தின் கவனத்தை விலக்க முயற்சி செய்து வருகின்றனர்.

பாகிஸ்தான் ராணுவ தளபதி அஸீம் முனீர், தொடர்ந்து காஷ்மீர் பற்றி தங்களுக்கு உரிமை இருப்பதாகக் கூறி வருகின்றார். “காஷ்மீர் எங்களது கழுத்து நரம்பு” என அவர் கொக்கரித்து வந்ததை இந்தியா கடுமையாக எதிர்க்கிறது. இதைத் தொடர்ந்தே, பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் க்வாஜா ஆசிப், நாட்டின் பயங்கரவாத ஆதரவை நேரடியாக ஒப்புக்கொள்வதுபோல், “நாங்கள் பல ஆண்டுகளாக பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆயுதம் மற்றும் நிதியுதவி வழங்கி வருகிறோம்” என தெரிவிக்கிறார்.
இந்த நிலையில், பிரதமர் ஷாபாஸ் ஷெரிப், சிம்லா ஒப்பந்தத்தை முற்றிலும் புறக்கணித்து, அதை ரத்து செய்யத் தயாராக இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார். அதே நேரத்தில், தங்களின் மீது வரும் குற்றச்சாட்டுகளை ஏற்காமல், “நாங்கள் நடுநிலை விசாரணைக்கு தயாராக உள்ளோம்” எனவும் கூறுகிறார். இது பாகிஸ்தானின் வாக்குகளுக்கு முரணான நிலைப்பாடாக இந்தியாவின் பார்வையில் எதிரொலிக்கிறது.
பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானின் முக்கிய தலைவர்கள் வெளிநாட்டு ஊடகங்களுக்கு அளிக்கும் பேட்டிகளில், பழைய சர்ச்சைகளை மீட்டெடுத்து பேசுகிறார்கள். சமீபத்தில் ரஷ்ய ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ராணுவ அமைச்சர் க்வாஜா ஆசிப், “இந்தியாவும் பாகிஸ்தானும் பிரச்னையில் திளைக்கின்றன. இந்த பதட்டம் புதிதல்ல, இது 1,500 ஆண்டுகளாகவே இருக்கிறது” என்கிறார்.
இதே பேட்டியில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் விமர்சனம் பதிவு செய்துள்ளார். “இந்திய பிரதமரும், அதன் மக்கள் பல பொய்களைப் பேசுகின்றனர். அவர்கள் உண்மையா பொய்யா பேசுகிறார்கள் என்பதை அறிய, சர்வதேச நடுநிலை விசாரணை நடைபெற வேண்டும்” என அவர் வலியுறுத்தினார். இதே நேரத்தில், ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் இந்த விசாரணையில் பங்கேற்கவேண்டும் என்றும், வெறும் அறிக்கைகள் போதாது என்றும் அவர் கூறினார்.
இந்த நெருக்கடி சூழ்நிலையில், பாகிஸ்தானின் பேச்சுகள் தெளிவில்லாதவையாகவும், நியாயாதிக்கத்தைத் தவிர்க்கும் வகையிலும் இருக்கின்றன என்று இந்தியா மற்றும் பல்வேறு நாடுகள் பார்க்கின்றன. தங்களது செயல்களில் உண்மைதன்மை உள்ளதென உணர்த்துவதற்காக பாகிஸ்தான் சர்வதேச குழுவை எதிர்பார்க்கின்றது என்பது இன்றைய நிலை.
இந்த மாறும் மாறும் கருத்துகள் பாகிஸ்தான் தன் குற்றப்பங்களிப்பை மறைக்க முயற்சி செய்கின்றதா என்ற சந்தேகத்தையும் அதிகரிக்கச் செய்துள்ளது. வருங்காலத்தில், சர்வதேச சமூகமும் இந்த விசாரணையை எவ்வாறு அணுகும் என்பது முக்கியமான அம்சமாக இருக்கப்போகிறது.