பாரிஸ்: பாரீசில் ‘டெலிகிராம்’ சமூக வலைதள நிறுவனர் பாவல் துரோவ் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளார். இதற்கான காரணமும் வெளியாகி உள்ளது.
சமூக வலைதளங்களில் பேஸ்புக், டுவிட்டர் போன்று முக்கிய செயலியாக அறியப்படுவது டெலிகிராம். துபாயை அடிப்படையாக கொண்டு இயங்கி வரும் இந்த செயலியை ரஷ்ய நாட்டைச் சேர்ந்த பாவல் துரோவ், 39, என்பவர் நிறுவினார். பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் இரட்டை குடியுரிமையை பெற்றவர்.
இந்நிலையில் தீவிரவாத இயக்கங்களுக்குத் துணைபோவது, போதைப் பொருள் விநியோகம், சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதற்கு டெலிகிராம் செயலி அதிகளவில் பயன்பட்டு வருகிறதென்றும், அதை டெலிகிராம் நிறுவனம் எந்த தடையும் இன்றி அனுமதித்து, பயனர்களின் தகவல்களை அரசுகளிடம் இருந்து பாதுகாக்கவும் செய்கிறது என்ற குற்றச்சாட்டின் பேரில் பிரான்ஸ் நாட்டு போலீஸ் அவரை கைது செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.