புதுடெல்லி: AI (AI) உச்சி மாநாடு பிப்ரவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறுகிறது. 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள், சிறிய மற்றும் பெரிய நிறுவனங்களின் CEO கள், கல்வியாளர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மற்றும் அரசு நிறுவனங்களின் பிரதிநிதிகள், இதில் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் நேற்று முன்தினம் கூறும்போது, “பிரான்சில் நடைபெற உள்ள AI உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்று பிரதமர் மோடி வரும் 10-ம் தேதி பாரிஸ் செல்கிறார்” என்றார்.
மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி, முதல் முறையாக பிரான்ஸ் செல்கிறார். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டால், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பை தனியாக சந்தித்து பேசுவார் என தெரிகிறது. இதேபோல் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்ட உலக தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.