நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபை கூட்டத்தில் உரையாற்றிய பிரான்ஸ் அதிபர் எமனுவேல் மேக்ரான், ஓய்வு எடுப்பதற்காக பிரான்ஸ் தூதரகத்துக்கு செல்கிறார். அப்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வருகையால் நகரின் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, மேக்ரானின் காரும் வழியில் நிறுத்தப்பட்டது.
சிறிது நேரம் காத்திருப்பின் பின்னர், மேக்ரான் காரில் இருந்து இறங்கி, நேரடியாக போலீஸ் அதிகாரியிடம் “ஏன் வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளீர்கள்?” என கேள்வி எழுப்பினார். போலீசார், டிரம்பிற்காக போக்குவரத்தை நிறுத்தியதாக விளக்கம் கூறினர்.

இதையடுத்து, மேக்ரான் உடனே டிரம்பிற்கு போனால் தொடர்பு கொண்டு, “நடுரோட்டில் வாகனங்களை நிறுத்துவது சரியானது அல்ல; உடனடியாக போக்குவரத்தை மீண்டும் இயக்குங்கள்” என்று கிண்டலாக கூறினார். அதன் பின்னர், மேக்ரான் தமது திட்டப்படி தூதரகத்திற்கு சென்றடைந்தார்.
இந்த சம்பவம், உலக தலைவர்கள் சந்திக்கும் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு சிக்கல்களை சிரித்தலுடன் காட்டும் ஒரு நிகழ்வாக வலியுறுத்தப்படுகிறது.