மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸ் அவர்களுக்கு மீண்டும் சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளது. வத்திக்கான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “போப் பிரான்சிஸின் மூச்சுக்குழாயில் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் தொற்று ஏற்பட்டதால், அவருக்கு மீண்டும் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கத்தோலிக்க கிறிஸ்தவ தலைவர் போப் பிரான்சிஸ் (88) சுவாச கோளாறு காரணமாக கடந்த 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சுக்குழாய் தொற்று மற்றும் நிமோனியா இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் போப் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.