சாண்டியாகோ: தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள சிலி நாட்டில் வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் 7.3 ரிக்டராக பதிவானதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் சிலியின் கடலோர நகரமான அன்டோஃபாகஸ்டாவில் நிலத்தடிக்கு 126 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த உடனடி தகவல் இன்னும் கிடைக்கவில்லை. கடலோர நகரத்தை நிலநடுக்கம் தாக்கிய போதிலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
முன்னதாக கடந்த ஜனவரியில், வடக்கு சிலியின் தாரபாகாவில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. சில நாடுகள் பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளன. பசிபிக் ரிங் ஆஃப் ஃபயர் என்பது பசிபிக் பெருங்கடல் பகுதியில் பல பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் ஏற்படும் ஒரு முக்கியமான பகுதியாகும். இதன் விளைவாக, அந்தப் படுகையில் அமைந்துள்ள சிலியில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுகிறது. கடந்த 2010ஆம் ஆண்டு சிலி நாட்டில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 526 பேர் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.