புதுடெல்லி: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:-
21-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு மற்றும் 19-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடியும் 10 மற்றும் 11-ம் தேதிகளில் லாவோஸ் செல்கிறார்.
தலைநகர் வியன்டியனில், அந்நாட்டின் பிரதமர் சோனெக்சே சிபாண்டோனை சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்க உள்ளார். ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு கூட்டாண்மையை விரிவுபடுத்துவதன் மூலமும், எதிர்கால ஒத்துழைப்பின் திசையை தீர்மானிப்பதன் மூலமும் இந்தியா-ஆசியான் உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யும்.
கிழக்கு ஆசிய உச்சி மாநாடு பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் தலைவர்களிடையே கருத்துப் பரிமாற்றத்திற்கான வாய்ப்பை வழங்கும்.