சமீபத்தில் உக்ரைன் தலைநகர் கீவ் சென்ற பிரதமர் மோடி, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்து பேசினார். அப்போது அவர் ரஷ்யாவுடன் நடந்து வரும் போருக்கு அமைதி வழியில் தீர்வு காண்பதற்கு இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
இந்நிலையில் பிரிக்ஸ் மாநாடு ரஷ்யாவில் அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.இதுவரை மொத்தம் 15 பிரிக்ஸ் மாநாடுகள் நடைபெற்றுள்ளன.
புதினின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி, வரும், 23ல், பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க, ரஷ்யா செல்கிறார்.மாஸ்கோவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில், புதின் கூறியதாவது: மோதலை தீர்ப்பதில், ரஷ்யா ஆர்வமாக உள்ளது. உக்ரைனுடனான போர் குறித்து தொடர்ந்து கவலை தெரிவித்து வரும் பிரதமர் மோடிக்கு நன்றி.
பிரதமர் மோடியுடன் பேசும் ஒவ்வொரு முறையும் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறார். அமைதி வழியில் உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டு வாருங்கள். இது எங்களால் அல்ல, உக்ரேனிய தரப்பால் செய்யப்பட வேண்டும். பிரிக்ஸ் அமைப்பு யாருக்கும் எதிரானது அல்ல. ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் அமெரிக்கா.