மாஸ்கோ நகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்காவின் சமீபத்திய ஈரான் தாக்குதல் விவகாரம் தொடர்பாக ரஷ்ய அரசு நேர்மையாக பதிலளித்தது. ரஷ்யாவின் கடுமையான பதிலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பேசும் எந்த திட்டமும் இல்லை என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது. ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு உலக நாடுகளில் பரபரப்பு நிலவுகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா எடுத்த இந்த நடவடிக்கையால் வளைகுடா நாடுகளும் பதட்டமடைந்துள்ளன.

இந்த சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பிடம் ரஷ்ய அதிபர் புடின் பேசுவாரா என்ற கேள்விக்கு, “இப்போதைக்கு அதுபோன்ற எந்த திட்டமும் இல்லை” என்று க்ரெம்பிளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெளிவாக கூறினார். அவர் மேலும், “தேவைப்பட்டால் பின் பேசலாம்” எனவும் கூறினார். அதே நேரத்தில், ரஷ்யாவின் முன்னாள் அதிபர் மெத்வதேவ், “அணுசக்தி மையங்களை தாக்கியதன் மூலம் அமெரிக்கா எதை சாதித்தது?” என்று கேள்வி எழுப்பினார். இந்த தாக்குதலில் உள்ளமைப்புகள் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, உக்ரைன்-ரஷ்யா போருக்கு மத்தியில் டிரம்ப், புடின் குறித்து கடுமையாக விமர்சித்து, அவரை பைத்தியம் என்றும், உக்ரைன் தலைவர் ஜெலன்ஸ்கியை குறித்தும் அவதூறாக பேசினார். இந்த வரிசையில், ரஷ்யா தற்போது டிரம்ப் தொடர்பான உரையாடலை ஏற்கவில்லை என்பது தற்போது சர்வதேச அரசியல் சூழலில் முக்கியத்துவம் பெறுகிறது.