கிவ்: உக்ரைன் நேட்டோவில் சேருவதைத் தடுக்க ரஷ்யா பிப்ரவரி 2022-ல் உக்ரைனுக்கு எதிராகப் போரைத் தொடங்கியது. அது இன்னும் முடியவில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் மின் விநியோக மையங்களை குறிவைத்து ரஷ்யா கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதில், உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல நகரங்களில் உள்ள மின் உற்பத்தி மையங்கள், மின் பகிர்மான மையங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களின் தாக்குதல் இரவு மற்றும் அதிகாலையில் தொடர்வதால், தலைநகர் கீவ் உட்பட பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் குளிர்காலத்தில் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
உக்ரைனுக்கு உளவியல் நெருக்கடியை அதிகரிக்க ரஷ்யா இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து உக்ரைன் எரிசக்தி துறை அமைச்சர் ஜெர்மன் காளஸ்ஷென்கோ தனது முகநூல் பக்கத்தில், “உக்ரைனில் உள்ள மின் நிலையங்களை குறிவைத்து மற்றொரு பெரிய அளவிலான தாக்குதல் நடத்தப்படுகிறது. உக்ரைன் முழுவதும் உள்ள மின் உற்பத்தி மையங்கள் மற்றும் மின் விநியோக மையங்களை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆன்ட்ரி சிபிஷா கூறுகையில், “அமைதியான நகரங்கள், உறங்கும் மக்கள், முக்கியமான கட்டமைப்புகள் மீது ரஷ்யா பாரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.