ரஷ்யா : இந்தியாவுக்கு மேலும் இரண்டு ‘S-400’ வான் பாதுகாப்பு அமைப்பு வழங்கப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூரின் போது, பாகிஸ்தான் இந்தியாவை நோக்கி நடத்திய ஏவுகணை தாக்குதல்களை தூளாக்கி, நாட்டின் வான்பகுதியை பாதுகாப்பதில் ரஷ்ய தயாரிப்பான ‘S-400’ வான்பாதுகாப்பு அமைப்பு முக்கிய பங்காற்றியது.
மேலும் பாகிஸ்தான் அனுப்பிய 400க்கும் மேற்பட்ட ட்ரூன்களை ரஷ்யா வழங்கிய வான் பாதுகாப்பு அமைப்பை வைத்து இந்தியா முழுமையாக முறியடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மேலும் 2 சாதனங்களை விரைவாக அனுப்ப இந்தியா ரஷ்யாவிடம் கோரியது.
இந்நிலையில், 2025-26க்குள் 2 ‘S-400’ அமைப்புகள் இந்தியாவுக்கு டெலிவரி செய்யப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. ஏற்கெனவே இந்தியா மூன்று ‘S-400’ அமைப்புகளை வாங்கி பயன்படுத்தி வருகிறது. தற்போது மேலும் இரண்டு வான் பாதுகாப்பு அமைப்புகள் ரஷ்யாவிடமிருந்து வரப்போகிறது. இதனால் நம் எல்லைப் பகுதியில் மேலும் பாதுகாப்பு அதிகரிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.