அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளார். இந்த நடவடிக்கையை ஐரோப்பிய ஒன்றியமும் ஆதரித்து, இந்தியாவை குற்றம் சொல்கிறது.
ஆனால், இந்தியா மட்டுமல்லாமல் பல நாடுகளும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி வருகின்றன. அதில் சீனா முதல் இடத்தில் உள்ளது. சீனாவின் இறக்குமதி மதிப்பு ரூ.19.25 லட்சம் கோடி. இந்தியா 11.70 லட்சம் கோடி மதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

அதனைத் தொடர்ந்து துருக்கி, ஐரோப்பிய ஒன்றியம், பிரேசில், சிங்கப்பூர், ஹங்கேரி, தென்கொரியா, சவுதி அரேபியா, ஸ்வோவாக்கியா போன்ற நாடுகளும் உள்ளன. இது போன்ற நாடுகள் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்கவில்லை என்பது விமர்சனத்துக்குரியது. டிரம்ப் இந்தியா மீதான வரிகளை மட்டும் உயர்த்துவது தனிப்பட்ட அரசியல் நோக்கம் கொண்டதாகவே தெரிகிறது.
இந்தியா மட்டும் தான் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குகிறது என்ற புரிதலை மக்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். உலக நாடுகள் தங்கள் தேவைப்படி எரிவாயுவை பெற்றுக் கொள்கின்றன. ஆனால், இந்தியா மீது மட்டும் பாகுபாடான அணுகுமுறை அமெரிக்காவிடம் இருந்து தொடர்கிறது. இது சர்வதேச தரப்பில் நீதியற்ற நடவடிக்கை எனக் கூறப்படுகிறது.