மாஸ்கோ: ரஷ்யாவில் மக்கள்தொகை சரிவு என்பது கடந்த சில ஆண்டுகளாக கடுமையான பிரச்சினையாக இருந்து வருகிறது. இதனால் அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் தற்போது ஆபாசப் படங்களைக் காட்டிலும் மக்கள் கவனத்தை ஈர்க்கும் வழிகளைக் கண்டுபிடிப்பது முக்கியமாகும் என தெரிவித்துள்ளார். ஆபாசப் படங்களின் தாக்கம் அதிகரித்துள்ளது மற்றும் அதனுடன் தொடர்புடைய பல சமூக பிரச்சினைகளும் அதிகரித்து வருகின்றன. ரஷ்யாவில், ஆபாசப் படங்களின் பரவலுக்கு முக்கிய காரணமாக அவற்றை எளிதில் அணுகும் சூழல் மற்றும் அதன் மூலம் மக்களின் மனநிலைகளின் பாதிப்புகள் உள்ளன. இதனால், மக்கள்தொகை குறையும் சூழலுக்கு ஆபாசப் படங்களும் தொடர்பு கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையில், விளாடிமிர் புடின் ஒரு பேட்டியில் கூறியதாவது, ஆபாசப் படங்களை பூர்வீகமாகத் தடை செய்வதை விட, அவர்களுக்கு மாற்றாக மக்களை ஈர்க்கக்கூடிய மற்றும் சுவாரஸ்யமான கன்டென்டுகளை உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஆபாசப் படங்களை தடை செய்தால் அது ஒரு தீர்வு கிடையாது, ஆனால் அதற்குப் பதிலாக, மக்கள் நேரடியாக ஈர்க்கும் விஷயங்களை உருவாக்கினால், இந்த பிரச்சினையை சமாளிக்க முடியும் என்று அவர் கூறினார். மேலும், உலகெங்கும் ஆபாசப் படங்களை மக்கள் பார்க்கின்றனர் என்பதையும் அவர் குறிப்பிட்டார். இதனால், இந்த பிரச்சினை ரஷ்யாவுக்கு மட்டும் தான் இல்லாமல், உலகளவில் பரவிய பிரச்சினையாக இருக்கின்றது.

ரஷ்யாவின் மக்கள்தொகை சரிவை கட்டுப்படுத்தவும், பிறப்பின் வீதம் குறைவதை சமாளிக்கவும், புதின் பல புதிய முன்னெடுப்புகளை அவ்வப்போது கூறி வருகின்றார். சமீபத்தில், அவர் ரஷ்யாவில் மக்கள் மதிய உணவுகளின் நேரத்திலும் காபி பிரேக் சமயத்திலும் பாலியல் உறவுகளை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தார். இதன் மூலம், மக்கள்தொகையில் ஏற்படும் குறைபாடுகளை சரி செய்வது சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது. தற்போது, ரஷ்யாவில் கருவுறுதல் விகிதம் 1.5ஆக இருக்கின்றது, ஆனால் இது நிலையான மக்கள்தொகைக்காக குறைந்தபட்சம் 2.1 ஆக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, ரஷ்யா அரசு 18 முதல் 40 வயது பெண்களுக்கு இலவசமாக கருவுறுதல் சோதனைகள் நடத்த முடியும் என்று அறிவித்துள்ளது. இதன் மூலம், மக்கள்தொகையை நிலைத்திருக்க வலியுறுத்தப்படுகிறது.