பெர்லின் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் உலகின் முன்னணி வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனம் போஷ் (Bosch), பெரும் அதிர்ச்சியூட்டும் வகையில் 13 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தீர்மானித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துவரும் புதிய வரிகள் உலக வாகன சந்தையை பெரிதும் பாதித்துள்ளன. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் மீது 100 சதவீதம் வரி, சமையல் பொருட்கள் மீது 50 சதவீதம் வரி உள்ளிட்ட முடிவுகள் செலவை அதிகரித்துள்ளன. இதன் தாக்கம் வாகன உற்பத்தித் துறையிலும் தெளிவாகப் பட்டுள்ளது.

டெஸ்லா, பிஒய்டி போன்ற முன்னணி நிறுவனங்கள் ஏற்கனவே ஊழியர் குறைப்பை அறிவித்த நிலையில், தற்போது போஷ் நிறுவனம் 13 ஆயிரம் பணியாளர்களை பணி நீக்கம் செய்யும் முடிவை எடுத்துள்ளது. உலகம் முழுவதும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றும் இந்நிறுவனத்தில், சந்தை சரிவு காரணமாக ஏற்பட்ட இழப்புகளை சமாளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன உற்பத்தி துறை எதிர்கொண்டுவரும் மந்தநிலை, அமெரிக்க வர்த்தக கொள்கை மாற்றங்கள், உலக பொருளாதார சிக்கல்கள் ஆகியவை இந்த பெரிய ஆள்குறைப்புக்கு காரணமாகக் கூறப்படுகின்றன. இதனால் பல நாடுகளில் உள்ள போஷ் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.