
இன்றைய சமூக ஊடகங்களில், யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற தளங்களில் வீடியோக்களை வெளியிடுவதன் மூலம் பலர் வெற்றிகரமாக பணம் சம்பாதித்து வருகின்றனர். இவர்களில் அமெரிக்காவைச் சேர்ந்த 20 வயது சோஃபி ரெயின் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளார். கடந்த ஒரு வருடத்தில் அவர் ரூ. 367 கோடி, ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் வருமானம். எப்படி என்ற கேள்வி எழுகிறதா?
சோஃபி ரெயின் ஒரு எளிய குடும்பத்தில் இருந்து வந்தவர். அவர் தனது 17 வயதில் குறைந்த ஊதியத்திற்கு உணவகத்தில் பணியாற்றத் தொடங்கினார். ஆனால், ஏப்ரல் 2023 இல், சமூக ஊடகமான ஒன்லி ஃபேன்ஸில் தனது வீடியோக்களைப் பதிவேற்றத் தொடங்கியபோது, அவை பலராலும் பரவலாகப் பேசப்பட்டு விரைவில் ரசிகர்களைப் பெற்றன.
சோஃபி ரெயின் தனது ஒரு வருட வருமானத்தைப் பகிர்ந்துகொண்டு, தனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றத்தை விளக்கினார். இந்தப் பணத்தைக் கொண்டு, தன் தந்தையின் கடனையும் அடைத்துவிட்டு, தன் வருமானத்தில் 70% பெரும் தொகையை முதலீடுகளுக்குச் செலவு செய்திருக்கிறார்.
இப்போது, அவர் 3 கார்கள் மற்றும் பல்வேறு ஆடம்பர ஆடைகளை வைத்திருக்கிறார். அவர் தனது ஒன்லி ஃபேன்ஸ் பக்கத்தில் 11 மில்லியன் சந்தாதாரர்களையும், இன்ஸ்டாகிராமில் 5.2 மில்லியன் பின்தொடர்பவர்களையும், அவரது எக்ஸ் பக்கத்தில் 2.5 மில்லியன் பின்தொடர்பவர்களையும் குவித்துள்ளார்.
இந்த சமூக ஊடக தளங்களில் தனது திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் சோஃபி ரெய்ன் பெரும் வருமானம் ஈட்டியுள்ளார்.