ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரையன் நிக்கோல், கடந்த ஆண்டு 4 மாதங்களில் 827 கோடி ரூபாய் ஊதியம் பெற்றுள்ளார். செப்டம்பரில் பணியில் சேர்ந்த பிரையன், நான்கே மாதங்களில் இந்த எண்ணக்கரமான ஊதியத்தை பெற்றுள்ளார். இது கூகுளின் தலைமை நிறுவனமான ஆல்பபெட்டின் CEO சுந்தர் பிச்சை மற்றும் ஆப்பிள் CEO டிம் குக்கின் ஊதியத்தை விட அதிகமாகும்.
காலிபோர்னியாவிலிருந்து ஸ்டார்பக்ஸ் தலைமை அலுவலகம் உள்ள சியாட்டல் வரை செல்ல தனி ஜெட் விமானம் மற்றும் வீட்டு வாடகை உள்ளிட்ட செலவுகளையும் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது.