சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரின் பூமிக்கு திரும்பும் பயணம் மேலும் ஒரு மாதம் தாமதமாகும் என நாசா தெரிவித்துள்ளது.
ஜூன் 5ம் தேதி, நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோருக்கு ஆய்வுக்காக பூயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. ஆனால், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்கள் பல மாதங்களாக விண்வெளியில் சிக்கி உள்ளனர்.

நாசா, இவர்களை பூமிக்கு அழைக்கும் பணியில் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளது. ஏற்கனவே, 2025 பிப்ரவரியில் இந்த பயணத்தை நிறைவேற்ற திட்டமிட்டிருந்தது. எனினும், தற்போதைய நிலவரப்படி, க்ரூ டிராகன் விண்கலத்தை ஏவுவதற்கு மேலதிக நேரம் தேவைப்படுகிறது.
மார்ச் இறுதியில், விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என எலான் மஸ்கின் நிறுவனம் தெரிவித்துள்ளது.