அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெறவுள்ளது.ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் போட்டியிடுகின்றனர். இரு வேட்பாளர்களும் தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளின் வாக்குகளை கவர கடுமையாக உழைத்து வருகின்றனர். அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இந்த தேர்தலில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என கருதப்படுகிறது.
பென்சில்வேனியா, நார்த் கரோலினா, ஜார்ஜியா, மிச்சிகன் போன்ற மாநிலங்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 50 லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். ‘இந்திய-அமெரிக்க அணுகுமுறைகள் 2024’ என்ற கருத்துக்கணிப்பின்படி, 60 சதவீதம் பேர் கமலா ஹாரிஸுக்கும், 30 சதவீதம் பேர் டிரம்புக்கும் வாக்களிப்பார்கள். இது கடந்த தேர்தலை விட டிரம்புக்கு கிடைத்த ஆதரவு அதிகம்.
மேலும், கமலா ஹாரிஸுக்கு இந்திய வம்சாவளி பெண்களும், ட்ரம்புக்கு ஆண்கள் ஆதரவு அளிக்கும் வாய்ப்பு அதிகம். கமலா ஹாரிஸ் முன்கூட்டியே முன்னிலை பெற்றாலும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் டிரம்புக்கான ஆதரவு அதிகரித்து வருவதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.