ஜமைக்கா: ஜமைக்காவில் கொள்ளை சம்பவத்தின் போது நடந்த துப்பாக்கி சூட்டில் தமிழக இளைஞர் உயிரிழந்தார். அவரது உடலை மீட்டு தருமாறு உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜமைக்கா நாட்டில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் கொள்ளை சம்பவத்தின்போது துப்பாக்கி சூட்டில் தமிழக இளைஞர் உயிரிழந்ததன் சி.சி.டி.வி காட்சி வெளியாகி உள்ளது.
நேற்று முன்தினம் முன்பு ஜே.கே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த கொள்ளையர்கள், துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். இதில் காயமடைந்த நெல்லையை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் உயிரிழந்தார்.
தற்போது துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகளை வெளியிட்டுள்ள உறவினர்கள் உடலை மீட்டுத் தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.