டோக்கியோ: ஜப்பானில் ஸ்மார்ட்போன் பயன்படுத்த திடீர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போதைய இயந்திரமயமான வாழ்க்கையில் ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு இல்லாமல் யாரும் இருக்க முடியாது. ஆனால் அவற்ரை அதிக அளவு பயன்படுத்துவதால் உடல்நலக் குறைபாடுகள் மட்டுமின்றி தேவையற்ற சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றனர்.
இந்நிலையில், ஜப்பானில் இயற்கை எழில் கொஞ்சும் பாரம்பரிய நகரான டோயோக்கேவில் உள்ள பொதுமக்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த அந்த நகரின் மேயரால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.
ஸ்மார்ட்போன் பயன்பாடு காரணமாக பாலியல் சம்பவங்கள் மற்றும் கடத்தல் வழக்குகள் அதிகரித்து வருவதாகவும், இதனால் குற்றச் சம்பவங்கள் கூடுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அறிவிப்பின்படி நகர பொதுமக்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2 மணி நேரம் மட்டும் ஸ்மார்ட்போன் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு உள்ளது.
தேவைப்பட்டால் தொலைபேசி மற்றும் மற்ற பிற தொலை தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.