நியூயார்க்: சுனிதா வில்லியம்ஸை அழைத்து வர மார்ச் 12ம் தேதி பால்கன் ராக்கெட் மூலம் ஏவப்படும் ஸ்பேஸ் எக்ஸின் டிராகன் க்ரூ காப்ஸ்யூல் சிறப்புகள் பற்றி தெரியுங்களா?
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு பூமிக்கு திரும்ப முடியாமல் பல மாதங்கள் விண்வெளியில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், அவர்களை பூமிக்கு கொண்டு வர ஸ்பேஸ் எக்ஸின் க்ரூ டிராகன் காப்ஸ்யூல் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளது.
மார்ச் 12ம் தேதி பால்கன் ராக்கெட் மூலம் ஏவப்படும் இந்த கேப்சூலில் 7 பேர் வரை பயணம் செய்யலாம் என கூறப்படுகிறது.