உக்ரைன்: ரஷ்யாவுடனான போரின் முடிவு அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளின் கைகளில் உள்ளது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுடனான போரின் முடிவு, மேற்கத்திய நட்பு நாடுகளின் ஆயுத உதவியையும், அதைப் போரில் பயன்படுத்துவதற்கான அனுமதியையும் பொறுத்துள்ளது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அடுத்த வாரம் அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோருடன் தாம் மேற்கொள்ள உள்ள சந்திப்புகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை எனத் தெரிவித்துள்ளார்.
உக்ரைனிடம் தற்போதுள்ள ஆயுதங்களோ, ட்ரோன்களோ, ஏவுகணைகளோ போதுமானதாக இல்லை என்றும், உக்ரைனின் பாதுகாப்பு, சுதந்திரம், வெற்றி அனைத்தும் அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளின் ஆதரவைப் பொறுத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.