அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக நாடுகளுடனான வர்த்தகத் திட்டங்களை வலுப்படுத்தும் நோக்கத்தில், தற்போது இந்தியாவுடனான முக்கிய வணிக ஒப்பந்தத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். சீனாவுடன் நீண்ட காலமாக நீடித்து வந்த வர்த்தகப் போர் முடிவுக்கு வந்ததையடுத்து, புதிய உறவுகளை உருவாக்கும் நோக்கத்தில் இந்த ஒப்பந்தம் உருவாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தம் ஜூலை மாதம் கையெழுத்தாகும் வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா இந்தியா இடையேயான கடந்த சில ஆண்டுகளாக வர்த்தக உறவில் திருப்திகரமான நிலை காணப்படவில்லை. இரு நாடுகளும் ஒருவர்மேல் ஒருவர் வரிகள் விதித்து வந்ததால், பல துறைகள் நேரடியாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக இந்தியாவில் இயங்கும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்கள், அமெரிக்கா ஏற்றுமதியில் இருக்கும் முக்கிய பொருட்கள் ஆகியவை அதிக வரி சுமையால் வர்த்தக நஷ்டத்தை சந்தித்தன. இதை சரி செய்யவே இந்நிலை வந்துள்ளது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஒப்பந்தத்தில் டிஜிட்டல் வர்த்தகம், தகவல் தொழில்நுட்பம், மருத்துவ உபகரணங்கள், ரோபோடிக்ஸ், விமானம் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பம் போன்ற துறைகள் அடக்கம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அமெரிக்கா இந்தியாவிடம் இருந்து அதிகளவில் மருந்துகள் மற்றும் தொழில்நுட்ப மேம்பட்ட சேவைகளை பெறும் வாய்ப்பு இருப்பதால், இந்த ஒப்பந்தம் இருதரப்புக்கும் மிகவும் பயனளிக்கக் கூடியதாக இருக்கும் என நிபுணர்கள் மதிப்பீடு செய்கிறார்கள்.
இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக கையெழுத்தாகுமாயின், இந்தியா-அமெரிக்கா உறவில் ஒரு புதிய விகிதமுறையை ஏற்படுத்தும். வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், இரு நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கும் இது ஒரு முக்கிய முன்னேற்றமாக அமையும். இருநாடுகளுக்கிடையேயான நம்பிக்கையும், அரசியல் நட்பும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் மேலும் வலிமையடையும் என்று கருதப்படுகிறது.