புதுடில்லி: வெளிநாடுகளுக்கு சென்று கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
முன்னதாக பெரும்பணம் கொண்டவர்கள் தான் தங்களது குழந்தைகளை வெளிநாட்டில் படிக்க அனுப்பினர். ஆனால் சமீப காலங்களில் இது மாறிய நிலையில் இருந்தாலும், தற்போது மீண்டும் குறைவு காணப்படுகிறது. கனடா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சென்று கல்வி பெறும் மாணவர்கள் எண்ணிக்கையில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது.

கனடா செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை 2.78 லட்சத்திலிருந்து 1.89 லட்சமாக குறைந்துள்ளது. அமெரிக்காவுக்குச் செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை 34 சதவீதம் குறைந்திருக்கிறது. பிரிட்டனில் கல்வி பெறும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 1.2 லட்சத்திலிருந்து 80,000 ஆக குறைந்துள்ளது.
இந்தக் குறைவுக்கு முக்கிய காரணமாக கல்வி அனுமதிகளுக்கும், விசா வழங்கல் குறித்த கட்டுப்பாடுகளும் அமைந்துள்ளன. குறிப்பாக கனடா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் மாணவர் விசாக்களுக்கு கடுமையான விதிமுறைகளை விதித்து வருகின்றன. இதனாலே இந்திய மாணவர்களின் வெளிநாட்டு கல்வி எண்ணிக்கை இவ்வாறு குறைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.