பெய்ஜிங்: சீனாவின் சோங்கிங் நகரில் ஒரு நிலத்தடி உணவகம் உள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது பதுங்கு குழியாகப் பயன்படுத்தப்பட்ட இந்த இடம், இப்போது ஒரு உணவகமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த உணவகம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த இடமாக மாறியுள்ளது.
வெளியே வெயில் கொளுத்தினாலும், பதுங்கு குழியில் இயங்கும் உணவகத்தில் குளிர்ந்த காற்று மிகுந்த நிம்மதியைத் தருவதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். உணவகத்தின் உள்ளே வெப்பநிலை 77 டிகிரி பாரன்ஹீட் என்றும், சோங்கிங்கில் வெப்பநிலை 104 டிகிரி பாரன்ஹீட் என்றும் வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.

அதுமட்டுமின்றி, சோங்கிங் குடியிருப்பாளர்கள் தங்கள் குடும்பத்தினரின் பிறந்தநாளை இந்த உணவகத்தில் கொண்டாடுகிறார்கள். 520 மீட்டர் நீளமுள்ள இந்த உணவகத்தில் உணவருந்துபவர்களுக்காக 280 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சோங்கிங்கில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட பதுங்கு குழிகள் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.