தென் ஆப்பிரிக்கா: தென் ஆப்பிரிக்காவில் சாகசத்தின் போது விமானம் வெடித்து சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தென் ஆப்ரிக்காவின் சல்டானாவில் நிகழ்ந்த விமான சாகசத்தின் போது விமானம் கீழே விழுந்து நொறுங்கிய பதைபதைக்க வைக்கும் காட்சி இது. இந்த கோர விபத்தில் விமானி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
விமானம் தனது கட்டுப்பாட்டை இழந்தபோதும் பார்வையாளர்கள் பகுதியில் விழாமல் இருக்க விமான போராடிய கடைசி நிமிடக் காட்சிகள் வெளியாகியுள்ளது.
ஒருவேளை விமானம் பார்வையாளர்கள் மீது விழுந்திருந்தால் நிலைமை மோசமாகியிருக்கும். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நல்ல வேலையாக விமானம் பார்வையாளர்கள் மத்தியில் விழாமல் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.