சென்னை: சென்னையில் இருந்து 124 பேருடன் மதுரைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நடுவானில் புறப்பட்டபோது இன்ஜினில் கோளாறு ஏற்பட்டது.
117 பயணிகள், 7 பணியாளர்கள், 124 பேருடன் மதுரை சென்ற ஏர் இந்தியா விமானம் சென்னை திரும்பியது. நடுவானில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விமானத்தை மீண்டும் சென்னைக்கு திருப்பி அவசரமாக தரையிறக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மதியம் 1 மணியளவில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
அனைத்து பயணிகளும் விமான நிலையத்தில் ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.