புதுடில்லி: மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஜிதின் பிரசாத், “இந்தியாவும் அமெரிக்காவும் பல்வேறு துறைகளில் பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தக ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளன. மேலும், சந்தை அணுகலை அதிகரிப்பது, கட்டண மற்றும் கட்டணமற்ற தடைகளைக் குறைப்பது மற்றும் விநியோகச் சங்கிலி ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.

இருதரப்பு வர்த்தக உறவுகளை பரஸ்பர நன்மை மற்றும் நியாயமான முறையில் விரிவுபடுத்த அமெரிக்காவுடன் இந்தியா தொடர்ந்து பணியாற்றி வருகிறது. இது தொடர் முயற்சி. மாறிவரும் வர்த்தக சூழலில், கணிசமான அளவு வர்த்தகத்தில் சுங்க வரிகள் மற்றும் கட்டணமற்ற தடைகள் குறைக்கப்படுகின்றன அல்லது நீக்கப்படுகின்றன. இதில், இந்தியா முன்னுரிமை மற்றும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை நோக்கி நகர்கிறது. இந்தியா மீது அமெரிக்கா இதுவரை எந்தவிதமான பரஸ்பர வரிகளையும் விதிக்கவில்லை.