பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர, அமெரிக்காவின் 250வது ஆண்டு ராணுவ அணிவகுப்பு விழாவில் கலந்து கொள்கிறார் என்ற செய்தி பரவியது. அவருக்கு அமெரிக்க அரசு அழைப்பு விடுத்ததாக கூறப்பட்டது. இதற்கிடையே, ஜனாதிபதி டிரம்பின் பிறந்த நாள் நிகழ்ச்சியிலும் பங்கேற்பார் என தகவல்கள் வெளியானது. இதனால், இந்திய அரசியல் வட்டாரங்களில் எதிர்வினைகள் கிளம்பின.

இந்த சூழலில் காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனம் தெரிவித்தது. பாகிஸ்தானின் ராணுவத் தலைவர் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டவர் என்றும், அவரை அழைத்தது வேதனையளிக்கிறது என்றும் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்தபாஜக, இது வெறும் வதந்தி மட்டுமே என கூறி காங்கிரஸ் கட்சியையே விமர்சித்தது.
அதையடுத்து, வெள்ளை மாளிகை அதிகாரிகள் நேரடியாக விளக்கம் அளித்தனர். பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும், விழாவில் எந்த வெளிநாட்டு ராணுவத் தலைவரும் பங்கேற்பதில்லை என்றும் அவர்கள் உறுதியளித்தனர். இதனையடுத்து, பரவிய செய்தி தவறானதென உறுதிப்படுத்தப்பட்டது.
இது போன்ற தவறான தகவலால் அரசியல் குழப்பங்கள் உருவாகலாம் என்பதற்கான எடுத்துக்காட்டாக இந்த விவகாரம் அமைந்துள்ளது. சர்வதேச உறவுகளில் உண்மை தகவல்களின் முக்கியத்துவம் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தப்பட்டது.