வாடிகன் சிட்டி: குழந்தைகள் பிறக்காத ஒரே இடம் எது தெரியுமா? அப்படி ஒரு இடம் இருக்கிறதா என்று கேட்கிறீர்களா. ஆமாங்க கண்டிப்பாக இருக்கிறது.
உலக நாடுகளில் குழந்தை பிறப்பது சாதாரண நிகழ்வாக இருந்து வருகிறது. ஆனால், ஒரு குழந்தை கூட பிறக்காத நாடாக இத்தாலியின் ரோம் நகரில் அமைந்துள்ள வாடிகன் சிட்டி உள்ளது.
இங்கு 825 மக்கள் மட்டுமே வசிக்கும் நிலையில், பிறப்பு விகிதம் பூஜ்ஜியமாக உள்ளது. இதற்கான காரணம் அப்பகுதியில் மருத்துவமனைகள் இல்லை. மேலும், அது புனிதத் தலமாக கருதப்படும் நிலையில், யாருக்கும் நிரந்தர குடியுரிமை வழங்கப்படுவது இல்லை.