ஜப்பான்: ஜப்பானில் பாரம்பரிய மதுபானம் தயாரிக்கும் பணி மிக தீவிரம் அடைந்துள்ளது.
ஜப்பான் நாட்டின் பராம்பரியங்களில் ஒன்றான அரிசியில் இருந்து மதுபானம் தயாரிக்கும் கலைக்கு யுனஸ்கோ பாரம்பரிய அங்கீகாரம் அளிக்க உள்ளது.
அந்நாட்டின் பியூசா நகரில் உள்ள சாமுராய் காலத்திற்கு முந்தைய அரிசி மது தயாரிக்கும் ஆலையில் இதற்காக பிரத்யேக மது தயாரிக்கும் பணி நடைபெற்றது.
ஒரு காலத்தில் ஜப்பான் மக்கள் விரும்பி அருந்திய மதுபானமான சேக், அயல்நாட்டு மதுபான வருகையால் மதிப்பிழந்து உள்ளதாகவும், யுனஸ்கோ அங்கீகாரத்தால் சேக் மதுபானத்தை மக்கள் அருந்தும் நிலை வரும் என்றும் மதுபான தயாரிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.