அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடுத்த வாரம் பரஸ்பர வரி விதிப்பதை திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். தனது பதவியேற்ற முதல் நாளிலிருந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவது மற்றும் இறக்குமதி வரியை அதிகரிப்பது போன்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமெரிக்கா வர்த்தகப் போரின் விரிவாக்கமாக இந்த புதிய வரியை அறிவிக்க இருப்பதாக தெரிவித்தார். இது அமெரிக்காவை பொருளாதார ரீதியாக சமப்படுத்தும் என அவர் கூறினார். அமெரிக்கா மற்ற நாடுகளிடமிருந்து அதிக வரி வசூலிக்க விரும்பவில்லை என்றாலும், இது நேர்மையான நடவடிக்கை என்று அவர் விளக்கினார். சமீபத்தில் கனடா மற்றும் மெக்சிகோ பொருட்களுக்கு 25% இறக்குமதி வரியை விதித்திருந்தார்.
ஆனால், கடைசி நேரத்தில் அவர் அந்த உத்தரவை தற்காலிகமாக நிறுத்தியிருந்தார். புதிய வரி திட்டம் எந்த அளவிற்கு அமெரிக்காவிற்கும் மற்ற நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த அறிவிப்பு உலகளவில் பொருளாதார மாற்றங்களை உருவாக்கக்கூடும்.
அமெரிக்காவின் வரி உயர்வு மற்ற நாடுகளை பதிலடி நடவடிக்கைகள் எடுக்க செய்யக்கூடும். கனடா, மெக்சிகோ போன்ற நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் வாய்ப்பு உள்ளது. டிரம்பின் இந்த அறிவிப்பு உலகளவில் பெரும் எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. வர்த்தகக் கொள்கை மாற்றங்கள் குறித்தும் எதிர்கால பொருளாதார நிலைமை குறித்தும் பொருளாதார நிபுணர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.