அரிசோனா: அமெரிக்காவின் ஹீரோ சார்லி கிர்க் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க் இணைந்து கலந்து கொண்டனர். சார்லி கிர்க், உட்டா பல்கலையில் நிகழ்ச்சியின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலை அமெரிக்காவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குற்றவாளி டைலர் ராபின்சன் மீது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நினைவஞ்சலி நிகழ்ச்சியில் டிரம்ப் பேசியதாவது: “சார்லி சிறந்த அமெரிக்க ஹீரோ. அவர் நாட்டின் பாதுகாப்பிற்காக போராடினார். இந்த கொலை தனிப்பட்ட தாக்குதல் அல்ல; இது நாட்டை குறிக்கும் தாக்குதலாகும். வெள்ளை மாளிகையில் சார்லி சுதந்திரத்திற்கான ஜனாதிபதி பதக்கத்தை பெறுவார்” என்று அவர் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் துணை அதிபர் ஜேடி வான்ஸ், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, தொழிலதிபர் எலான் மஸ்க் மற்றும் கிர்க்கின் மனைவி எரிக்கா ஆகியோர் கலந்துகொண்டனர். கிர்கின் மனைவி எரிக்கா, கணவரை கொன்ற கொலையாளியை மன்னிப்பதாக தெரிவித்தார்.
புகைப்படங்களில், டிரம்ப் மற்றும் மஸ்க் அருகில் அமர்ந்து உரையாடும் தருணம் இணையத்தில் வைரலாகி பெரும் கவனத்தை பெற்றுள்ளது. இந்த இணைந்த படம் சமூக வலைதளங்களில் பலர் பகிர்ந்து கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.