வாஷிங்டனில் நிருபர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், “உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட மத்தியஸ்தம் செய்வது எனக்கு சொர்க்கத்திற்கு செல்ல உதவும். நான் சொர்க்கத்தை அடைய விரும்புகிறேன். உயிர்களை காப்பாற்றுவதே என் இறுதி இலட்சியம்” என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது: “உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் ஒரு வாரத்தில் ஆயிரக்கணக்கான உயிர்களை பறிக்கிறது. அந்த உயிரிழப்புகளைத் தடுக்க முடிந்தால் அதுவே மிகப்பெரிய சாதனை. அமெரிக்க மக்கள் அல்லது அமெரிக்க வீரர்கள் உயிரிழப்பதில்லை. ஆனால், ரஷ்யா மற்றும் உக்ரைனில் பலர் ஏவுகணை தாக்குதல்களில் உயிரிழக்கிறார்கள். அதை நிறுத்த வேண்டும் என்பதே என் நோக்கம்” என்றார்.
டிரம்பின் இந்தக் கருத்துகள், உக்ரைன்-ரஷ்யா போருக்கு அவர் காட்டும் மத்தியஸ்த மனநிலையை வெளிப்படுத்துவதாகும். அதேசமயம், அமைதியை நிலைநாட்டுவது தன்னுடைய ஆன்மீக இலட்சியத்துடன் தொடர்புள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.