அமெரிக்கா: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதவியேற்றுடன் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அந்த வகையில் அமெரிக்க அரசு ஆண் மற்றும் பெண் என்ற இரு பாலினங்களை மட்டும் தான் அங்கீகரிக்கும் என்று அறிவித்துள்ளார்
மேலும் மெக்சிகோ வளைகுடா அமெரிக்கா வளைகுடா என்று பெயர் மாற்றப்படும். பிறப்புரிமைக் குடியுரிமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு தனி திட்டம் வகுக்கப்படும்.
ஏற்கனவே அறிவித்ததை போல் பாலின வேறுபாடு முடிவுக்கு கொண்டு வரப்படும். அமெரிக்க அரசு ஆண் மற்றும் பெண் என்ற இரு பாலினங்களை மட்டும் தான் அங்கீகரிக்கும். இது அரசின் அதிகாரப்பூர்வ கொள்கை முடிவு. இவ்வாறு பல்வேறு அறிவிப்புகள் வெளியாகிபடியே உள்ளது.