வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட வரி அமெரிக்காவுக்குப் பெரும் சாதனையெனக் கூறியுள்ளார்.
இந்தியா, ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் வாடிக்கையாளராக இருந்ததால், அதனை கட்டுப்படுத்த 50 சதவீத வரி விதித்ததாக டிரம்ப் தெரிவித்துள்ளார். “இந்தியாவுக்கு இவ்வாறு வரி விதிப்பது எளிதான காரியம் அல்ல. அது அமெரிக்கா–இந்தியா உறவில் விரிசல் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அமெரிக்க நலனுக்காக நான் பல கடின முடிவுகளை எடுத்துள்ளேன்,” என்றார்.

மேலும், “இந்த பிரச்னை அமெரிக்காவுக்கே அல்ல, ஐரோப்பாவின் பிரச்னையாகவும் உள்ளது. உலகளவில் 7 மோதல்களை நான் முடிவுக்கு கொண்டு வந்துள்ளேன். காங்கோ–ருவாண்டா இடையே 31 ஆண்டுகள் நீண்ட போரை கூட தீர்த்து வைத்தேன். இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும்,” என வலியுறுத்தினார்.
டிரம்ப் இந்த கருத்து வெளிப்படுத்தியதால், அமெரிக்கா–இந்தியா வர்த்தக உறவில் ஏற்பட்டிருக்கும் பதட்டம் குறித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது. வரவிருக்கும் BRICS உச்சிமாநாட்டில், இந்த விவகாரம் முக்கியமாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.