வாஷிங்டன்: கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றதிலிருந்து டிரம்ப் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நடவடிக்கைகளில் பெரும்பாலானவற்றிற்கு செலவினக் குறைப்புகளே காரணம் என அவர் குறிப்பிட்டு வருகிறார். இந்நிலையில் அமெரிக்க கல்வித்துறையை கலைக்கும் கோப்புகளில் டிரம்ப் கையெழுத்திட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும், கல்வித்துறையை மாநிலங்களின் பட்டியலுக்கு மாற்றும் பணியை துரிதப்படுத்தவும் கல்வித்துறை செயலாளருக்கு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் அதே சமயம் சிறப்பு மாணவர்களுக்கான நிதி திட்டங்களை அமெரிக்க அரசு தொடர்ந்து வழங்கும் என்று அதிபர் டிரம்ப் ஒரே ஒரு ஆறுதல் கூறியுள்ளார். அமெரிக்கக் கல்வித் துறையின் கீழ் சுமார் 1 லட்சம் அரசுப் பள்ளிகளும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளின் 85 சதவீத செலவுகளை மாநில அரசுகள் ஏற்கின்றன. இருப்பினும், கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியாத மாணவர்களின் கடனை அமெரிக்க மத்திய கல்வித் துறை கவனித்து வருகிறது. இதன் மூலம் டிரில்லியன் கணக்கான டாலர்கள் கல்விக்கடன் வழங்கப்படுகிறது.

இது மத்திய கல்வித்துறைக்கு பெரும் சுமையாக உள்ளது. இந்நிலையில், இந்த நிதிச்சுமையை குறைக்கும் நடவடிக்கையாக கல்வித்துறையை கலைத்து, கல்வித்துறையின் முழு பொறுப்பையும் மாநில அரசுகளிடம் மாற்றுவதற்கான ஆவணங்களில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். டிரம்பின் இந்த செயலுக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, குடியரசு கட்சி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. கல்வியின் தரத்தை கண்காணிக்கும் துறையை கலைக்க ஜனாதிபதி என்ன நடவடிக்கை எடுப்பார் என்றும் கல்வி ஆர்வலர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பணியில் ஏற்கனவே கல்வித்துறையைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து கல்வித்துறையை கலைத்து டிரம்ப் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இந்தச் செயல் குறித்து பேசிய டிரம்ப், “இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை எடுக்கிறோம். 45 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள நடவடிக்கை. அமெரிக்கக் கல்வித் துறையை அகற்றும் உத்தரவில் கையெழுத்திடுகிறேன்.
கல்வித் துறையை அகற்றினால் குழந்தைகளுக்கும், குடும்பத்துக்கும் பலன் கிடைக்கும். தோல்வியடைந்த அமைப்பின் பிடியில் இருந்து விடுபடுவோம். கல்விப் பொறுப்பை மாநிலங்களிடம் ஒப்படைக்கிறோம். உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், அமெரிக்காவில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில், 70 சதவீதம் பேர், கணிதம் படிக்க முடியாத நிலை உள்ளது.